கழிவு நீரால் சுகாதார சீர்கேடு வியாபாரிகள் அவதி

ஊட்டி, ஜூன் 1–





ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர்.



இந்த நிலையில் ஊட்டி மார்க்கெட் சுற்றி மணிக்கூண்டு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது இதனால் அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், ஊட்டி நகரின் முக்கிய பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே கட்டுமான பணிகள் காரணமாக மார்க்கெட் வர முடியவில்லை, தற்போது கழிவு நீர் பிரச்னையும் சேர்ந்திருப்பதால் இங்கு வந்தால் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது.’ என்றனர்.

Advertisement