அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

21

சென்னை:அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: அரசு வக்கீல்கள் நியமனம் தகுதி அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும். பணம், பரிந்துரை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தகுதியில்லாமல் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் இனி நடக்காது.

அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம், லாவண்யம் இருக்காது. நியமனங்களில் மெரிட் முறை மட்டுமே பின்பற்றப்படும். மேகதாது விவகாரத்தில் அணை கட்டுவதை சட்டப்பூர்வமாக தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டவிடமாட்டோம்.


திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாலேயே அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. திமுக- அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர். தவெகவுக்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. தோழமை கட்சியினரின் ஆதரவுடன் தவெக அரசு முழு பலத்துடன் இருக்கிறது. இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement