டில்லி ஹோட்டல் தீ விபத்தில் 21 பேர் பலி; கட்டட உரிமையாளர் கைது
புதுடில்லி: டில்லி ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 21 பேர் பலியான சம்பவத்தில், கட்டட உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தெற்கு டில்லியின் மாள்வியா நகரில் உள்ள ஹவுஸ் ராணி பகுதியில், 'ப்ளரிஷ் ஸ்டே பி அண்டு பி' என்ற தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த ஆறு மாடி கட்டட விடுதியில், வெளிநாட்டினர் உட்பட, 70க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களும் இங்கு வாடகைக்கு வசித்து வந்தனர். இந்த விடுதியின் உணவகத்தில் நேற்று காலை, 8:45 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில், கட்டடம் முழுதும் தீ மளமளவென பரவியது. அறைகளில் தங்கியிருந்த வயதானவர்கள் உள்ளிட்டோர் வெளியேற முடியாமல் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விடுதியின் அருகில் இருந்த மெத்தை கடைக்காரர்கள் சிலர், தங்கள் கடைகளில் இருந்த மெத்தைகளை கொண்டு வந்து விடுதியின் முன் விரித்தனர்.
தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், நான்கு மற்றும் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர். பெண் ஒருவரும், மூன்றாவது மாடியில் இருந்த தன் குழந்தை யுடன் கீழே குதித்தார். மெத்தை விரிப்பில் விழுந்ததால், அவர்கள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்துக்கு, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், முதற்கட்டமாக விடுதியில் சிக்கிய, 60க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், இதில், 21 பேர் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்ககளில், 10க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த வெளிநாட்டினர், மத்திய ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது .
விடுதியில் நுழைய ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்ததால், அங்கிருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா, 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கட்டட உரிமையாளர் கைது:
இந்நிலையில், 21 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய டில்லி போலீசார், கட்டட உரிமையாளரான லாவ்கேஷ் பஜாஜ் என்பவரை கைது செய்தனர். சம்பவத்துக்குப்பின் தலைமறைவான பஜாஜ்ஜை, லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து போலீசார் தேடி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.
எந்த ஆட்சி இருந்தாலும் இது போன்ற விபத்துக்கள் நடந்த பிறகு பாதுகாப்பு குறைகளை கண்டறிவது ஏன்?
பாதுகாப்பு விதிகளை அவ்வப்போது ஆய்வு செய்யாதது ஏன்? சம்பந்த பட்ட அதிகாரிகளை மற்றும் ஹோட்டல் சொந்தர்க்காரரை துரித வழக்கில் விசாரித்து தூக்கில் போட வேண்டும்.
அடிப்படை தீ பாதுகாப்பு கூட இல்லாத இடத்துக்கு எப்படி அனுமதி கிடைத்தது என்று ஆராய்ந்து பொறுப்பில்லாத வகையில் அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.மேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்