கட்டட அனுமதிக்கு லஞ்சம், முறைகேடு புகார் எதிரொலி; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கும் நகரமைப்பு பிரிவில் லஞ்சம், முறைகேடு போன்ற புகார்களால், அப்பிரிவில் பணி புரிந்த அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மண்டல அலுவலகங்களில் அனுமதி வழங்கும் அதிகாரிகளையும் மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், 3 மாடிகள் வரை கொண்ட வீடு, வணிக வளாகம், தொழில் நிறுவனங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதில், 5000 சதுர அடி வரை, அந்தந்த மண்டலங்களில் அனுமதி வழங்கப்படும்.
இதுவே, 5,000 முதல் 10,000 சதுர அடி வரை, மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகையில் உள்ள நகரமைப்பு பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, சொத்தின் கிரைய பத்திரம், பட்டா, சிட்டா, 13 ஆண்டுக்கான வில்லங்க சான்று, பதிவு பெற்ற கட்டட வடிவமைப்பாளர் அளித்த வரைபடம், மண் பரிசோதனை, தீயணைப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன், உரிய கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை பரிசீலித்து, உதவி பொறியாளர்கள் முதல் கண்காணிப்பு பொறியாளர்கள் வரையிலான அதிகாரிகள், 27 நாட்களுக்குள், கட்டுமான விதிமுறைகள் நிர்ணயித்து அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால், சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் மண்டலங்களில், வீதிமீறல், லஞ்சம் போன்ற காரணத்தால், பல விண்ணப்பங்கள் காரணம் இல்லாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன.
காலதாமதம் காரணமாக, கட்டடம் கட்ட இருந்தவர்கள், அலைக்கழிக்கப்பட்டதுடன் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து, அவரது உத்தரவின்படி, மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பணிபுரிந்த, கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் கடைநிலை ஊழியர்கள் உட்பட, 12 பேர் அதிரடியாக, இதர பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதர பிரிவுகளில் இதே பொறுப்புகளில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள், ஊழியர்கள் நகரமைப்பு பிரிவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, ஏற்கனவே மாநகராட்சி கமிஷனராக இருந்தவர். அப்போது நடந்த விதிமீறல்கள் எல்லாம், அவருக்கு நன்றாக தெரியும்.
அப்போது, ஆட்சியாளர்கள் தலையீடு காரணமாக, குறிப்பிட்ட சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாத நிலை; இதனால், 10 ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், நீண்ட காலம் கோலோச்சிய அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றப்பட்டு உள்ளனர். ஒரு பிரிவில் பணிபுரியும் அனைவரையும், ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்தது இதுவே முதல் முறை.
இதை தொடர்ந்து, மண்டலங்களில் கட்டட அனுமதி வழங்கும், சில உதவி செயற்பொறியாளர்கள், செயற் பொறியாளர்களும் மாற்றப்பட உள்ளனர்.
மாநகராட்சியில் பொறியியல், சுகாதாரம், மருத்துவம், திடக்கழிவு போன்ற பிரிவுகளில், மூன்று ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அவர்களும் விரைவில் மாற்றப்பட உள்ளனர்.
கட்டட அனுமதியை உரிய கால அவகாசத்திற்குள் வழங்க வேண்டும். அனுமதி வழங்கிய பின், கட்டுமான பணிகளை உரிய அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். விதி மீறல்கள் இருந்தால், 'சீல்' வைப்பது, பணி நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கவும், ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
@block_G@ஒப்பந்தத்தின் வெளிப்படை தன்மையை உறுதி செய்யுங்க!
சென்னை மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, 125 கோடி லிட்டர் குடிநீரை, சீராகவும், தரமாகவும் வினியோகிக்க வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பகிர்மான நிலையங்களை கள ஆய்வு செய்ய வேண்டும். இணைப்பு இல்லாத பகுதிகளில், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் முறையாக நடக்கிறதா என, தினமும் கண்காணிக்க வேண்டும்.
திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய, எச்சரிக்கை பலகை, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா என, பார்க்க வேண்டும். திட்ட பணிகளுக்கான ஒப்பந்தத்தில், வெளிப்படை தன்மை இருப்பதை, சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
- ககன்தீப்சிங் பேடி,
செயலர், நகராட்சி நிர்வாகத்துறை.block_G
இந்த முறைகேடுகளைத் தலைமை ஏற்று நடத்துவது கவுன்சிலர்கள்/ பெண் கவுன்சிலர்களின் கணவர்/ தந்தை/ சகோதரன். இவர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் ஷைலாக் போன்றவர்கள். கொஞ்சம் கூட மனிதாபமே இல்லாமல் வகை வகையாய் லஞ்சம் கேட்பார்கள்.
இடமாற்றம் செய்தால் போதுமா ?
ஊழல்கள் எல்லாம் நடப்பது அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது . அதிகாரவர்க்கத்திற்கு அடிபணிந்து சுய கௌரவத்தை இழைக்கக்கூடாது என்பதனால் நமக்கென்ன நாயி வலம்போன என்ன இடம்போன என்ன நம்மேல் விழுந்து கடிக்காமல் இருந்தால் சரி என்ற வழக்குமொழிக்கேற்ப அமைதியாக இருக்கின்றார்கள் .அதிகாரிகள்யெல்லாம் கூட்டுசேர்ந்தாள் லஞ்சம் முறைகேடுகள் இல்லாமல் பணிகள் நடக்கும் ..
மொத்தமாக வேலையை விட்டு தூக்குவதை விட்டுவிட்டு பஜனை செய்வதால் ஒரு பயனும் இல்லை.
நேர்மைக்கு பெயர் பெற்ற ஓர் அதிகாரி.. ஆயினும் இவ்வளவு காலம் கோமாவில் இருந்தது சிறு வருத்தமே …பார்க்கலாம ..மேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்