தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
புதுடில்லி: வளர்ச்சியடைந்த இந்தியா எனும் நமது கனவை நனவாக்க, தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: தெலுங்கானா மக்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். தெலுங்கானா மக்கள் தங்கள் படைப்பாற்றலுக்கும், வணிகத் திறமைக்கும் பெயர் பெற்றவர்கள் ஆவர். இம்மாநிலம், துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் போராட்ட உணர்வின் அடையாளங்களாகத் திகழும் ஒரு மகத்தான வரலாற்றையும், புகழ்பெற்ற கலாசாரத்தையும் கொண்டுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா எனும் நமது கனவை நனவாக்க, தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. தெலுங்கானா மாநில மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
12 ஆண்டுகள் நிறைவு
கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவின் முதல் முதல்வராக பதவியேற்றார். தற்போது தெலுங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேவந்த் ரெட்டி மிகவும் புத்திசாலி மற்றும் பிரதமரிடம் எப்படி சோப்பு பூச வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அவருக்கு எல்லா ஆதரவும் கிடைக்கிறது. மற்ற காங்கிரஸ்காரர்களுடன் ஒப்பிடும்போது இவர் சிறந்தவர். ஸ்டாலின் எப்போதும் போர்க்குணமிக்கவராக இருந்தார், அதனால் ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சியைச் சீர்குலைத்தார்.
மொழி வாரி மாநிலம் என்ற காங்கிரஸ் ஆந்திரா, தெலுங்கானா என்று பிரிக்க காரணம். தெலுங்கானா ஆந்திராவுடன் இணைக்க வேண்டும். பின் கர்நாடகா. மூன்றும் ஒரே மாநிலம். அது போல் தமிழகம், கேரளா, புதுச்சேரி. இதில் பிரிவினை குழு கூச்சல் போட்டால், அதன் பகுதியை யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும். அது போல் வடகிழக்கு மாநிலங்கள்.
He always wants to cooperate with Tamilnadu. But, the State Government is not joining hands with the National Policy and for stupid political reasons, they are always talks about separatism and other outdated policies.
தெலுங்கானா முதல்வரும் புது கர்நாடக முதல்வரும் RSS பின்னணி கொண்டவர்கள்.. ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும் .. விஜய் சிறப்பு தூதுவராக பாலக்காட்டுக்காரரை நியமித்தால் ஒத்துழைப்பு கிடைக்கும்
தமிழ் நாட்டையும் கொஞ்சம் கவனிங்க.மேலும்
-
மீண்டும் மேற்காசியாவில் பதற்றம்; வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; முறியடித்தது அமெரிக்கா
-
ஒரே இரவில் 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்; உக்ரைனில் 22 பேர் பலி
-
காரைக்குடியில் அம்மா உணவகம் புதுப்பிப்பு இல்லை தினமும் புளியோதரை வழங்குவதால் அதிருப்தி
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' 2026 டேஷ்கேம் வரும் ஒரே காம்பேக்ட் எஸ்.யூ.வி.,
-
டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
-
ஸ்கோடா 'கோடியாக்' 2026