பைக் மீது மினி வேன் மோதி வாலிபர் பலி
செஞ்சி: செஞ்சி அருகே பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் முரளி, 25: கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு இரவு 8:00 மணியளவில் தனது பைக்கில் காரை கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
ஒட்டம்பட்டு அருகே வந்த போது எதிரே வந்த மினி வேன் மோதியதில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் மேற்காசியாவில் பதற்றம்; வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; முறியடித்தது அமெரிக்கா
-
ஒரே இரவில் 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்; உக்ரைனில் 22 பேர் பலி
-
காரைக்குடியில் அம்மா உணவகம் புதுப்பிப்பு இல்லை தினமும் புளியோதரை வழங்குவதால் அதிருப்தி
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' 2026 டேஷ்கேம் வரும் ஒரே காம்பேக்ட் எஸ்.யூ.வி.,
-
டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
-
ஸ்கோடா 'கோடியாக்' 2026
Advertisement
Advertisement