காய்கறி, பழச்செடிகள் மானிய விலையில் விற்பனை

கரூர்:காய்கறி நாற்றுகள், பழச்செடிகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் செயல்பட்டு வரும், அரசு தோட்டக்கலை பண்ணையில் காய்கறி நாற்றுகள், பழச்செடிகள், பூச்செடிகள், மரக்கன்றுகள், அழகு செடிகள், மண்புழு உரம், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் டிவிரிடி ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி
களுக்கு நேரடி விற்பனை முறையிலும், அரசு மானியத்திலும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, விவசாயிகள் வட்டார அளவில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது முதலைப்பட்டி, அரசுதோட்டக்கலை பண்ணையை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement