பைக் மோதி மூதாட்டி பலி

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த சீர்பாதநல்லுாரை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பார்வதி, 65; இவர் தற்காலிகமாக அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை அத்தியூர் சந்தையில் காய்கறிகளை வாங்கி கொண்டு அத்தியூர் - தொழுவந்தாங்கல் சாலையில் நடந்து சென்றபோது, அதே திசையில் தொழுவந்தாங்கலை சேர்ந்த பெருமாள் மகன் சுதாகர், 30; என்பவர் ஓட்டி வந்த பைக், பார்வதி மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த பார்வதியை மீட்டு மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் அழைத்து கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement