இலங்கை அணி வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்

கிங்ஸ்டன்: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 41 ரன்னில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப், பீல்டிங் தேர்வு செய்தார்.
நிசங்கா அபாரம்
இலங்கை அணிக்கு நிசங்கா, கமிந்து மெண்டிஸ் (12) ஜோடி துவக்கம் தந்தது. நிசங்கா, கேப்டன் குசல் மெண்டிஸ் என இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 136 ரன் சேர்த்த போது, குசல் மெண்டிஸ் (72) அவுட்டானார். நிசங்கா 79 ரன் எடுத்தார்.
பவன் ரத்னாயகே (24), அசலங்கா (45) கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவரில் 303/7 ரன் எடுத்தது. லியனாகே (44) அவுட்டாகாமல் இருந்தார்.
சமீரா 'நான்கு'
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்பெல் (17), கிரீவ்ஸ் (45) ஜோடி துவக்கம் தந்தது. கீஸ் கார்டி (27) கைவிட, ஷாய் ஹோப் 56 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். துஷ்மந்த் சமீரா 'வேகத்தில்' ராஸ்டன் சேஸ் (33), போர்டு (15) வெளியேற, குடகேஷ் மோடீ 22 ரன் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 49.2 ஓவரில் 262 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. ஷமார் ஜோசப் (23) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் சமீரா, 4 விக்கெட் சாய்த்தார்.

Advertisement