இரு தரப்பினர் மோதல் : 11 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கோவில் சீட்டு பணம் கணக்கு பார்த்த போது தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவத்தில் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வரஞ்சரம் அடுத்த அசகளத்துாரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சரவணன், 45; இவர், கடந்த 1ம் தேதி இரவு மாரியம்மன் கோவில் சீட்டு பணம் கணக்குகளை சரிபார்த்து கொண்டிருந்தார்.
இது தொடர்பாக சரவணனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மொட்டையன் மகன் வெங்கடேசனுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
அப்போது, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சண்டையில் சரவணன் அணிந்திருந்த கை செயின், வெங்கடேசன் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை மாயமானது. இருவரும் போலீசில் புகார் அளித்தனர்.
இதில், சரவணன் அளித்த புகாரின் பேரில், வெங்கடேசன், 37; மொட்டையன், 60; கலியன், 55; மூக்கன் மகன் கலியன், 50; சுப்ரமணியன், 51; ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் பாண்டுரங்கன், 38; ராமமூர்த்தி, 55; பன்னீர், 50; சரவணன், 45; சம்பத், 46; குள்ளகோவிந்தன், 45; ஆகிய 6 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
50வது டெஸ்டில் ரிஷாப் பன்ட் * நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதல்
-
ஜெர்சி 'நம்பர்-10' யாருக்கு * நெய்மர்-வினிசியஸ் மோதலா
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி
-
இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * இந்தோனேஷிய பாட்மின்டனில்...
-
இலங்கை அணி வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்