ரத்ததான முகாம்
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. முதல்வர் செல்வராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவக் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், நிலைய மருத்துவர் முகமது ரபி, துணை நிலைய மருத்துவர்கள் தென்றல், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ மாணவர்கள் 44 பேர் ரத்ததானம் வழங்கினர். அவர்களுக்கு முதல்வர் சான்றிதழ் வழங்கினார். நோய்குறியியல் துறைத்தலைவர் சர்மிளா திலகவதி, இணை பேராசிரியர் விஜயலெட்சுமி, ரத்த மைய மருத்துவ அலுவலர் முஜப்பர் கான் உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
50வது டெஸ்டில் ரிஷாப் பன்ட் * நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதல்
-
ஜெர்சி 'நம்பர்-10' யாருக்கு * நெய்மர்-வினிசியஸ் மோதலா
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி
-
இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * இந்தோனேஷிய பாட்மின்டனில்...
-
இலங்கை அணி வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
Advertisement
Advertisement