துருப்பிடித்த வாகன கழிவுகள்: நகராட்சி  அலுவலகத்தில் அவலம்

உடுமலை: உடுமலை நகராட்சி, சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், துருப்பிடித்த வாகனங்கள் மற்றும் கழிவுகள் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.

உடுமலை நகராட்சி, அண்ணா பூங்கா அருகே, நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகம், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலக வளாகத்தில், பழுதடைந்த குப்பை வண்டிகள், வாகனங்கள் பராமரிப்பின்றியும், பயன்படுத்தாமலும், கழிவுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொருட்கள் வீணாகி வருவதோடு, சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானதாக மாறியுள்ளது.

மேலும், மழை பெய்தால், இவ்வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறி வருகிறது. சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகமே, வாகன கழிவுகள் கொட்டும் மையமாகவும், சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திலாவது, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement