வையாவூர் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வையாவூர் சாலையோரம் சிலர் கொட்டும் குப்பை கழிவுகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக வையாவூர் சாலை விளங்கி வருகிறது. இந்தச் சாலையின் ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகள் பல நாட்களாக அள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன.

தற்போது வெயில் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழையினால் இந்தக் குப்பைகள் அழுகி, அப்பகுதி முழுதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும், தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் ஈக்கள் மற்றும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கால்நடைகள் இந்தக் குப்பைகளைக் கிளறிச் சாலையின் நடுவே இழுத்து வருவதால், இரவு நேரங்களில் வாகன விபத்துகளும் நடைபெறுகின்றன.

எனவே, வையாவூர் சாலையில் தேங்கியுள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவதோடு, மீண்டும் அங்கு குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி பகுதியையொ்டடி இருக்கும் வையாவூர், கோனேரிகுப்பம் ஊராட்சி பகுதிகளைச் சிலர், சாலையோரங்களில் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர்.

இதை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், குப்பை கொட்டும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க உள்ளோம்..

இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement