ஏ.டி.எம்., மிஷின் உடைப்பு: கீழ்ப்பாக்கத்தில் பரபரப்பு
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கத்தில் ஏ.டி.எம்., மிஷின் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 'சிட்டி யூனியன்' வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைந்த மர்மநபர், கம்பி மற்றும் கல்லால் மிஷினை உடைக்க முயன்றார். அப்போது, பாதுகாப்பு அலாரம் ஒலிக்கவே, மர்மநபர் தப்பியோடினார்.
இதையறிந்த ஏ.டி.எம்., மைய கண்காணிப்பாளர் ஆதி, 25, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement