சங்கிலி கேட்டை சேதப்படுத்தி சென்ற வாகனம் பறிமுதல்

கூடலுார்: கூடலுார் போஸ்டாரா அருகே, நள்ளிரவில், வனத்துறையின் சங்கிலி கேட்டை சேதப்படுத்தி சென்ற வாகனத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கூடலுார் போஸ்வாரா பகுதியில் இருந்து, செம்பக்கொல்லி பழங்குடி கிராம வழியாக செல்லும் தார் சாலையில், வனத்துறையினர் சங்கிலி கேட் அமைத்துள்ளனர். நேற்று முன்தினம், நள்ளிரவு போஸ்பாரா பகுதிக்கு வந்த வாகனம், சங்கிலி கேட்டை சேதப்படுத்தி சென்றுள்ளது. பணியில் இருந்த முதுமலை வன ஊழியர்கள், சப்தமிட்டு வாகனத்தை நிறுத்த முயன்றனர். வாகனம் நிக்காமல் சென்று விட்டது.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி., கேமராவில் பதிவான, பதிவுகளின் அடிப்படையில், முதுமலை வனத்துறையினர், நேற்று, காலை மண்வயல் பகுதியில் வாகனத்தை பறிமுதல் செய்து, ஒருவரையும் பிடித்து, விசாரணைக்காக கூடலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.

Advertisement