உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி

மூங்கில்துறைப்பட்டு: புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்துனா புதுப்பட்டு–சேராப்பட்டு சாலையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

Advertisement