பட்டுக்கூடு வளர்ப்பில் முட்டை இளம்புழு தர சோதனை அவசியம்: இடைத்தரகர் ஆதிக்கத்தை குறைக்கவும் வழி காணலாமே
மாவட்டத்தில் 2000க்கு மேற்பட்ட விவசாயிகள் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் மல்பெரி செடி மூலம் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1979ல் பட்டு வளர்ச்சித்துறை துவங்கப்பட்டதில் இருந்து இத்தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர். பட்டுக்கூடு உற்பத்தியில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. இதனால் ஏராளமான விவசாய வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஆனால் பட்டு வளர்ச்சித்துறையின் கண்காணிப்பில் வழங்கப்பட்டு வரும் முட்டை, இளம்புழுக்களின் தரம் குறைவாக உள்ளது. இதனால் பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய், மகசூல் இழப்பு, சந்தையில் உரிய விலை கிடைக்காமல் போவது போன்ற பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
2024ம் ஆண்டு முதல் காப்பீடும் வழங்கப்படுவதில்லை. மாவட்டத்தில் விற்பனை அங்காடி இல்லாத நிலையில் தர்மபுரி, சேலம், ராசிபுரம் பகுதிகளில் உள்ள விற்பனை அங்காடிகளில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ளது.
இதை கருதி மாவட்டத்தில் விற்பனை அங்காடி ஏற்படுத்துவதோடு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து அங்காடிகளில் ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும். தளவாட பொருட்கள், மானியம் அதிகளவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளிடம் வலுத்துள்ளது.
மேலும்
-
திருமாவுக்கு திருப்பி செய்தது திமுக; ஸ்டாலின் முன்னிலையில் பனையூர் பாபு ஐக்கியம்
-
இந்தியாவில் 2009ம் ஆண்டு முதல் 1653 காட்டு யானைகள் உயிரிழப்பு; மனித செயல்பாடுகளே காரணம்!
-
ரேடியோவில் இருந்து மக்களின் மனம் வரை... மெர்சல் குரலில் மயக்கும் மெர்சி
-
கர்நாடக இசையே கனவு: சிறகடிக்கும் தங்கச்சிமடம் சிறுமி
-
வெள்ளை மாளிகையின் ஏஐ ஆலோசகர் பதவியில் இருந்து விலகுகிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்
-
நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்; சொல்கிறார் அமைச்சர் அருண்ராஜ்