எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கண்ணாடி சேவை
இன்று உற்சவ சாந்தி
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் அழகர் பூப்பல்லக்கில் கோயிலை அடைந்த நிலையில் இரவு கண்ணாடி சேவை நடந்தது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா நடந்தது. மே 30ல் விழா துவங்கி, மறுநாள் அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தினமும் பல்வேறு மண்டகப்படிகளில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் காலை அபிஷேகம் நிறைவடைந்து மாலை கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையுடன் இரவு 11:00 மணிக்கு பூ பல்லக்கில் புறப்பட்டார்.
தொடர்ந்து இரவு முழுவதும் நகர் வலம் வந்த பெருமாளுக்கு தேங்காய் உடைத்து பக்தர்கள் பிரசாதங்கள் வழங்கி வரவேற்றனர். நேற்று காலை கோயில் முன்பு பூஜைகள் நிறைவடைந்து, கருப்பண்ண சுவாமி சன்னதியில் சிறப்பு தீபாராதனைகள் நடந்த பின் மதியம் கோயிலை அடைந்தார். அங்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
மேலும் இரவு கள்ளழகர் மறைபொருளாக கண்ணாடி சேவையில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்தனர்.
––
மேலும்
-
ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?
-
'டவுட்' தனபாலு
-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்: பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள மறுசீரமைப்பு
-
'பொலிடிக்கல் பி.ஏ.,'க்கள் நியமனத்தில் அமைச்சர்கள் புகைச்சல்!
-
பழமொழி
-
பட்டுக்கூடு வளர்ப்பில் முட்டை இளம்புழு தர சோதனை அவசியம்: இடைத்தரகர் ஆதிக்கத்தை குறைக்கவும் வழி காணலாமே