சிறுபான்மையினருக்கு கடன் கலெக்டர் பத்மஜா தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது என, கலெக்டர் பத்மஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. தனிநபர், சுய உதவி குழு சிறுதொழில், கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கடன் வழங்கப்படுகிறது.
அதில் தனிநபர் கடன் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய், கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக 10 லட்சம், சுய உதவிக் குழுக் கடனாக ஒரு நபருக்கு 1 லட்சம் ரூபாயும் கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயின்றால், அதிக பட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது.மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும்
-
ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?
-
'டவுட்' தனபாலு
-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்: பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள மறுசீரமைப்பு
-
'பொலிடிக்கல் பி.ஏ.,'க்கள் நியமனத்தில் அமைச்சர்கள் புகைச்சல்!
-
பழமொழி
-
பட்டுக்கூடு வளர்ப்பில் முட்டை இளம்புழு தர சோதனை அவசியம்: இடைத்தரகர் ஆதிக்கத்தை குறைக்கவும் வழி காணலாமே