சசூரி கல்லுாரியில் இன்று கல்வி உதவித்தொகை தேர்வு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி - விஜயமங்கலம் ரோட்டிலுள்ள சசூரி கல்லுாரியில், கல்வி உதவித்தொகைக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் கலை அறிவியல் கல்லுாரியில் சேர்வதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறுவோர், இக்கல்வி நிறுவனத்தின் கோவை, திருப்பூர், விஜயமங்கலம் பகுதிகளில் உள்ள கிளைக் கல்லுாரிகளில், சிறப்பு கட்டண சலுகையில் சேர்ந்து படிக்கலாம்.
தேர்வில், 1 முதல் 50வது இடத்தில் மதிப்பெண் பெறுவோருக்கு, கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம். 51 முதல்100வது இடம் பிடிப்போருக்கு, 50 சதவீதம், 101 முதல் 150வது இடம் பிடிப்போருக்கு 35 சதவீதம், 151 முதல் 200வது இடம் பிடிப்போருக்கு, 25 சதவீதம் என கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் 20 சதவீதம் வரை சலுகை கட்டணம் வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெறும் 20 பேருக்கு, 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக, சசூரி கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?
-
'டவுட்' தனபாலு
-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்: பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள மறுசீரமைப்பு
-
'பொலிடிக்கல் பி.ஏ.,'க்கள் நியமனத்தில் அமைச்சர்கள் புகைச்சல்!
-
பழமொழி
-
பட்டுக்கூடு வளர்ப்பில் முட்டை இளம்புழு தர சோதனை அவசியம்: இடைத்தரகர் ஆதிக்கத்தை குறைக்கவும் வழி காணலாமே