பசுமைக்கு திரும்பிய முதுமலை துள்ளி குதிக்கும் புள்ளி மான்கள்

ஊட்டி: முதுமலை மழைக்கு பின், பசுமைக்கு திரும்பியதால் துள்ளி குதிக்கும் புள்ளிமான் கூட்டம் சுற்றுலா பயணியரை பரவசப்படுத்துகிறது.

நடப்பாண்டில் மே மாதம் வரை போதிய மழை இல்லாததால் முதுமலை புலிகள் காப்பகம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் வறட்சி நாட்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஊட்டி காமராஜர் சாகர் அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீர், வனத்துறை அமைத்துள்ள தொட்டிகளில் நிரப்பப்படுகிறது. வனவிலங்குகள் தொட்டியில் தண்ணீர் பருகி செல்கின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில், முதுமலை பகுதியில் புல் மற்றும் செடி கொடிகள் பசுமைக்கு திரும்பி உள்ளன. தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.

வனத்தை ஒட்டியுள்ள சாலையோரங்களில் கூட்ட கூட்டமாக வரும், புள்ளிமான்கள் துள்ளி குதித்து, புல்வெளியில் மேய்ச்சலில் இருப்பதை அவ்வழியாக வரும் சுற்றுலா பயணியர் ரசித்து செல்பி, போட்டோ எடுத்து செல்கின்றனர்.

Advertisement