அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்த கொட்டகையை அகற்றிய அதிகாரிகள்

செங்கல்பட்டு, ஜூன் 10–

திம்மாவரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை வருவாய் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அகற்றினர்.

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் கிராமத்தில் பாலாற்று கரையை ஒட்டி சர்வே எண் 1123ல் 5 ஏக்கர் அரசு தோப்பு புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த காலி இடத்தினை திம்மாவரம் கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த மாதம் 30ம் தேதி ஆக்கிரமித்து குடிசை அமைத்தனர். இதை அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற அறிவுறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் பாதுகாப்புடன், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் அதிகாரிகள் குடிசைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement