'நீட்' மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
புதுடில்லி: மருத்துவ படிப்பில் சேர 'நீட்' மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
நாடு முழுதும் கடந்த மே 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நடந்தது. இந்த தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, மே 3ம் தேதி நடந்த 'நீட்' நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, வரும் ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
எவ்வித முறைகேடுகளும் நடக்காத வகையில், ராணுவ கட்டுப்பாட்டுடன் மறுதேர்வை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், இதற்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21ம் தேதி நடக்கும் 'நீட்' மறுதேர்வை எழுத நாடு முழுதும் இருந்து 22.79 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஏம்பா .....
NEETதேர்வு பற்றி கனிமொழி அவர்களுக்கு தகவல் கொடுக்கவேணும்மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?