ஓராண்டில் தமிழகம் வழியாக 23 புதிய ரயில்கள் அறிமுகம்
சென்னை: 'கடந்த நிதியாண்டில், தமிழகம் வழியாக 23 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
தெற்கு ரயில்வே, பயணியரின் வசதிக்காக, கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகம் வழியாக 23; கேரளாவில் 14; கர்நாடகாவில் 5 புதிய ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமாக, நாட்டின் தென்முனையான நாகர்கோவிலை இணைக்கும் வகையில், நியூ ஜல்பாய்குரி -- நாகர்கோவில் அம்ரித் பாரத் ரயில், நியூ ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - திருவனந்தபுரம், போத்தனுார் - தன்பாத் புதிய அம்ரித் பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
உள்ளூர் பயணியருக்காக, சேலம், - ஈரோடு, பாலக்காடு, பொள்ளாச்சி உள்ளிட்ட 'மெமு' ரயில் இயக்கங்களும் தொடங்கப்பட்டன. திருவனந்தபுரம் - மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டது.
அத்துடன், திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு, 3 நாட்களில் இருந்து 4 நாட்களாகவும், திருச்சி - காரைக்குடி; காரைக்குடி - விருதுநகர் பயணியர் ரயில் தினசரியாகவும் சேவைகள் அதிகரிக்கப்பட்டன.
அதேபோல், பயணியரின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், 41 இணை ரயில்களிலும், 7 தனி ரயில்களிலும், கூடுதலாக 95 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேகம் அதிகரிப்பு உள்கட்டமைப்பு மற்றும் சிக்னல் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், 80க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணியர் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்ட்ல கோயம்புத்தூரு இருக்குங்களா?மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?