125 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் உட்பட்ட ராதானுார் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு கடந்த ஆண்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், சில வாரங்கள் மட்டுமே பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் ஊராட்சி பகுதியில் இத்திட்டப் பணிகள் நடைபெறாததால் ஊராட்சி மக்கள் இத்திட்டத்தில் வேலையின்றி பாதிப்படைத்தனர்.
இந்த நிலையில், மத்திய அரசு இந்தத் திட்டத்தின் வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தியதுடன், திட்டத்தின் பெயரையும் ‘விபி- ஜி ராம்ஜி’ என பெயர் மாற்றியது. இந்நிலையில், ஜூலை 1 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதால் இத்திட்டத்தில் ஊராட்சி மக்களுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி கலெக்டர் சிவகுரு பிரபாகரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
–––