ஆவின் செயலி குளறுபடி அம்பலமானது பின்னணி
கோவை: கோவை ஆவின் நிர்வாகம் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய புதிய மொபைல் செயலியில் உள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப விதிமீறல்கள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
ஆவின் செயலியை வடிவமைத்துள்ள, 'ஸ்விட்ச் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தில் கட்டுமானத் துறைக்கான குறியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மொபைல் செயலி மேம்பாடு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது நிறுவன சட்ட விதிகளுக்கு முரணானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செயலியில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பக் குளறுபடிகள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, நள்ளிரவு நேரங்களில் சர்வர் முடக்கம், ஜி.பி.எஸ்., வரைபடப் பிழைகள், பணப் பரிவர்த்தனை சிக்கல்கள், பயனர்களின் இருப்பிடத் தகவல், வாகன விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை தரவுகள் பாதுகாப்பு வசதிகள் இன்றி உள்ளது. இவை அனைத்தும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக புகார்கள் எழுந்ததால், சென்னையில் இருந்து அதிகாரிகள் குழு சமீபத்தில் பச்சாபாளையம் ஆவின் நிர்வாகத்தில் ஆய்வு நடத்தியது. ஆனால், அந்தக் குழுவினர் முகவர்களை சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. ஆய்வுக்கு பின்னரும் செயலி தொடர்பான குழப்பங்கள் நீடித்து வருவதாக முகவர்கள் சொல்கின்றனர்.
மேலும்
-
திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலையை ஆராய்வோமா?
-
விபூதி, குங்குமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன்
-
காவல் துறையினரிடம் பண மோசடி; இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி 'சஸ்பெண்ட்'
-
ஹார்முஸ் ஜலசந்தியில் 100 நாட்களாக தவிக்கும் 500 இந்திய மாலுமிகள்
-
தேர்தல் நிதியில் பாதி பணம் 'லபக்'; உண்மை கண்டறியும் குழுவிடம் காங்., நிர்வாகிகள் புகார்
-
திமுக ஆட்சியில் முக்கிய துறைகளில் 'டெண்டர்' முறைகேடு; ஆய்வு செய்ய ரகசிய குழுக்கள் அமைப்பு