மின்தடையின் போது டூ - வீலர் திருட்டு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, இரவு நேர மின்தடையை பயன் படுத்தி, இருசக்கர வாகனத்தை திருடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி அருகே, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார், 35; தனியார் நிறுவன ஊழியர். இரு நாட்களுக்கு முன், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த 'யமஹா ஆர்15' இரு சக்கர வாகனம் திருடுபோனது.

கண்காணிப்பு கேமராவை சரத்குமார் ஆய்வு செய்தபோது, இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டபோது, அங்கு வந்த மர்ம நபர், வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. பூந்தமல்லி போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement