கோயில் திருவிழா

சிங்கம்புணரி, ஜூன் 10-

சிங்கம்புணரி அருகே எஸ்.செவல்பட்டியில் பெரிய படைத்தலைவி அம்மன் எடுப்பு திருவிழா நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை ஊர்வலமாக விநாயகர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. காரண புரவிகளும் கொண்டுவரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அம்மன் சிலையை அங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள பெரிய படைத்தலைவி அம்மன் கோயிலுக்கு கிராமத்தினர் எடுத்துச் சென்றனர். அப்போது பெண்கள் நேர்த்திக்கடனாக பொம்மைகளையும் எடுத்து வந்தனர். பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement