தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமை வகித்தார்.
அவர் கூறியதாவது:
தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் 5 ஏக்கர் திட்ட தென்னை விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். தங்கச்சிமடம் பகுதியில் உள்ள அரசு, தனியார் இடங்களில் நடக்கும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு வழங்கும் திட்டங்கள், இடுபொருட்கள் சிறு, குறு தென்னை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
உயர்நிலையில் உள்ளவர்களும், இடைத்தரகர்களும் பயன்பெறுகின்றனர். உரித்த தேங்காய் கிலோ ரூ.60, உரிக்காத தேங்காய் ரூ.30, கொப்பரை தேங்காய் ரூ.180 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேங்காய், தேங்காய் எண்ணெய் அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், துணை செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
––
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை