கம்பு தானியத்துக்கு நிலையான விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
உடுமலை: தேவை அதிகரித்துள்ளதால், கம்பு தானியத்துக்கு, தற்போதைய சீசனில் நிலையான விலை கிடைத்து வருகிறது; மதிப்பு கூட்டு தொழில்களுக்கு வழிகாட்டினால், கம்பு சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் இடைப்பட்டத்தில், கிணற்று பாசனத்துக்கும், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரியாகவும் கம்பு சாகுபடி செய்கின்றனர். முன்பு, கம்பு சாகுபடி பரப்பு இப்பகுதிகளில் அதிகம் இருந்தது.
சிறு தானியங்களுக்கு போதிய விலை கிடைக்காதது, விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால், கம்பு உள்ளிட்ட சாகுபடிக்கு விதைப்பு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, கோடை காலத்தில், கம்பங்கூழ் தயாரிப்புக்கு கம்பு தானியத்தின் தேவை அதிகரித்தது; அதையொட்டி விலையும் கிடைத்து. எனவே இடைப்பட்டம் எனப்படும் கோடை சீசனில், கம்பு சாகுபடிக்கு விதைப்பு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
தற்போது உடுமலை சுற்றுப்பகுதிகளில், கம்பு அறுவடை தீவிரமடைந்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால், கம்பு விலை கிலோ, ரூ.23க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிணற்றுப்பாசனத்துக்கு வீரிய ஒட்டுரக கம்பு விதைகளை, விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கம்பு சாகுபடியில், அறுவடைக்கு முன் பறவைகளால், அதிக சேதம் ஏற்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்தவும் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. கம்பு தானியத்தில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டு உணவுப்பொருட்கள் தயாரிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பயிற்சிகளை வேளாண்துறை வாயிலாக வழங்கினால், கம்புக்கு தேவை அதிகரிக்கும்; விலை கிடைக்கும். சாகுபடி பரப்பும் அதிகரிக்கும்,' என்றனர்.
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு