மருத்துவ ஊழியருக்கு சம்பளம் இழுபறி      

சிவகங்கை, ஜூன் 23-தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரிவோருக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மகளிர் திட்டத்தின் கீழ் சம்பளம் பெறும் விதமாக மாநில அளவில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களாக 13,225 பேர் நியமிக்கப்பட்டனர். சிவகங்கையில் வீடு தோறும் சென்று சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு மாத்திரை வழங்கிவரும் பணியில் 285 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,500 என்ற நிபந்தனைபடி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 3 மாதமாக சம்பளம் வரவில்லை என நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ ஊழியர் சங்க மாநில துணை தலைவர் நிர்மலாதேவி, மாவட்ட செயலாளர் தீபிகா, பொருளாளர் மாலா உள்ளிட்டோர் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: தினமும் 2 மணி நேர வேலை என்ற நிபந்தனையுடன் தான் எங்களை நியமித்தனர். ஆனால், இன்றைக்கு 8 முதல் 12 மணி நேரம் வரை பணிபுரிகிறோம்.மாத்திரை வழங்கும் பணியை விட கூடுதல் பணிகளை செய்கிறோம்.எனவே நிலுவை சம்பளத்தை விடுவிக்க வேண்டும். அரசு ஊழியர்களாக ஏற்று மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்க வேண்டும் என்றனர். ///

 

 

Advertisement