தி.மு.க., அணியில் இருந்து இன்னும் வெளியேறவில்லை
@quote@ மின்வெட்டுக்கான காரணத்தை, தமிழக அரசு கண்டறிந்து சரி செய்ய வேண்டும். அரசு கேபிளில், மூன்று செய்தி சேனல்கள் நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
தி.மு.க., கூட்டணியில் இருந்து இன்னும் ம.தி.மு.க., வெளியேறவில்லை. ஒரு கட்சியின் உறுப்பினர், மற்றொரு கட்சியின் உறுப்பினராக, அக்கட்சி சின்னத்தில் போட்டியிடுவது துரதிருஷ்டவசமானது என்பதை தான், 'மனவேதனை' என கூறினேன்.
தி.மு.க., கூட்டணியில் இருந்தது தவறு என கூறவில்லை. உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க., கூட்டணியில் ம.தி.மு.க., இணைவது குறித்து, வரும் 27ம் தேதி நடக்கும் ம.தி.மு.க., பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும்.
கடந்த ஆட்சியில் இருந்த போதைப் பொருட்கள் நடமாட்டம் தற்போதைய ஆட்சி யிலும் தொடர்கிறது.
-- துரை வைகோ, முதன்மை செயலர் ம.தி.மு.க.,quote
இந்த குழு புழு மழு தொழு என்று எதற்காக இந்த வார்களையெல்லாம் இவர் பேசுகிறார் அப்பனுக்கும் புள்ளைக்கும் எந்தவித மக்கள் தொடர்பும் கிடையாது சும்மா கதை விடுகிறார்கள் இவர்கள் இருவரையும் மக்கள் கேட்டுக்கொள்வதே கிடையாது வெளிப்படையாகவே இவர்கள் திமுகவிலிருந்து விலகிவிட்டோம் என்று சொல்ல என்ன தயக்கம்
மலருக்கு மலர் தாவும் வண்டுகள்.
தம்பி நீங்க மட்டும் TVK க்கு போயிடாதீங்க. அவர்களுக்கு வீண் சுமை நீங்கள்
மானம் இழப்பததெற்கென்றே போவதெற்கென்றே சில கட்சிகள் /
அரசியலில் சிகரெட்டை எடுத்தோமா பற்றவைதோமா, , புகையை ஊதினோமா என்றெல்லாம் இருக்ககூடாது.
வெளியே போ என சொல்லி கழுத்தை பிடித்து தள்ளுவதெற்கு முன்பே போய்விடுங்கள்