இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
புதுடில்லி: இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா வயோதிகம் மற்றும உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
பாரதிராஜாவின் உடல் நேற்று இரவு 9 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரத்தின் இந்த வேளையில், அவரது குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாக்காரர்கள் மார்க்கெட் போனாலே, தமிழ் தேசியம், இந்தி எதிர்ப்பு, தனி ஈழம், அர்பன் நக்சலிஸம் பேசுவார்கள்
மோடிக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர் பாரதிராஜா என்பதால் இன்றுதான் இரங்கல் டவீட் வருகிறது
போலி திராவிட கூட்டங்களோடு சேர்ந்து கருப்பு கொடி காட்டினாலும் அவருக்கும் இரங்கல் தெரிவிக்கும் மனிதம் உயர்ந்தவர் மோடி.
மோடிக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர் பாரதிராஜா என்பதால் இன்றுதான் இரங்கல் டவீட் வருகிறது
ரகு சார் உங்களுக்கும் ட்வீட் போடுவோம்...வருந்தவேண்டாம்
உண்மையாலுமே ரொம்ப பெருந்தன்மை மிக்க மனிதர்தான்யா இவரு தனக்கெதிரா தேசவிரோத சக்திகளோடு இணைந்து கறுப்புக்கொடி காமிச்ச ஒருவனுடைய இறப்புக்கே இரங்கல் தெரிவிக்கிறாரு
அதனால் தான் மூன்று இந்திய மாலுமிகள் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தி இந்திய எண்ணெய் கப்பலை ஓமான் அருகே தாக்கி கொன்ற போது ஒரு இரங்கல் அல்லது வருத்தம், அமெரிக்காவுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை
ஆழ்ந்த இரங்கல்