இடுக்கியில் பன்றிக்காய்ச்சல் பலி எல்லையில் முகாம் அமையுங்கள்

கூடலுார், ஜூன் 13-

இடுக்கி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இடுக்கி சிறுதோனியைச் சேர்ந்த மாரியம்மா 82 பலியானார். மேலும் பலர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் மாவட்ட எல்லையான குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு வழியாக தமிழக பகுதிக்கு வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் சளி, இருமல் மற்றும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் நீர் மூலம் பரவும் நோய்கள் நாள்தோறும் பதிவாகி வருவதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து சோதனையில் ஈடுபட வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement