காரைக்கால் கோவிலில் சிலையை அவமதித்த நபருக்கு போலீஸ் வலை

காரைக்கால்: காரைக்கால் சிவன் கோவிலில் நாகர் சிலையை அவமதித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால் கைலாசநாதர் கோவில், கிழக்கு வாசலில் வடக்கு புறம் அமைந்துள்ள நாகர் சிலை மீது கடந்த 9ம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர் மனித மலத்தை பூசியதுடன், சிலையை காலால் எட்டி உதைத்து அவமானப்படுத்தி உள்ளனர்.

இச்சம்பவம் மறுநாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவில் தனி அதிகாரி விநாயகமூர்த்தி நேற்று முன்தினம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கோவிலில் சிலையை அவமதித்த நபர் யார் என, தேடி வருகின்றனர்.

Advertisement