பிரதமர் மோடி தலைமையில் கூடியது நிடி ஆயோக் கூட்டம்

5

நமது டில்லி நிருபர்



டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் கூடியது.

மத்திய அரசின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டமான நிடி ஆயோக் கூட்டம், புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. மாநிலங்களின் நிதித் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதல்வர் விஜய், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களின் முதல்வர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளனர்.
தமிழக முதல்வர் விஜய் தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.


முன் வரிசையில் விஜய்

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் குழு போட்டோ எடுத்துக் கொண்டனர். இதில், தமிழக முதல்வர் விஜய், முன் வரிசையில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.



@block_P@

கூட்டு முயற்சிகள்!

நிடி ஆயோக் கூட்டத்தின் படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நிடி ஆயோக் குழுவின் 11வது கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறேன். கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் முக்கியப் பங்காற்றும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். block_P

Latest Tamil News


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!



டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு


லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement