ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்; மின்வாரிய அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை

சென்னை: சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடர்பாக சிபிசிஐடி இன்று விசாரணையை துவக்கியுள்ளது.

திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரியத் தலைமை அலுவலகத்தில், மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் இருந்த கணினி 'ஹார்ட் டிஸ்க்'குகள் திருடப்பட்டன.

இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் விசாரணை அதிகாரியாக, டிஎஸ்பி பிரபு தலைமையில் ஒரு எஸ்பி, 3 டிஎஸ்பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடர்பாக சிபிசிஐடி இன்று விசாரணையை துவக்கியுள்ளது. சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement