ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு
நமது நிருபர்
ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த, 8ம் தேதி, ஓமன் அருகே, கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீப்பிடித்த கப்பலில் இருந்த, 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில், ஓமன் அருகே, நேற்று மற்றொரு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்டது. ஓமன் கடற்படையின் உதவியுடன், மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்தக் கப்பலில், 28 மாலுமிகள் இருந்தனர்; அதில், 24 பேர் இந்தியர்கள். தீப்பிடித்த கப்பலில் இருந்து, 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், மாயமான மூன்று பேரை தேடி வந்தனர். தற்போது இந்தத் தாக்குதலுக்குப் பிறகு காணாமல் போன மூன்று இந்தியர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்களை உடனடியாகத் தாயகம் திருப்பியனுப்புவதையும், உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்குகளுக்காக விரைவாகத் திருப்பியனுப்புவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தவறு செய்தது யாராக இருந்தாலும் இது கண்டனத்திற்குரியது.. இந்தியக் கப்பலில் தாக்குதல் நடத்துவது இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம். இதற்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்..
இந்த நாட்டின் அராஜகம் சீக்கிரம் முடிவுக்கு வரும்.
இப்போதும் நம்ம ஜீ விஸ்வகுருதான் ...
இதுக்கெல்லாம் நம்ம அரசு செவி சாய்க்க போவதில்லை, அமெரிக்க காரன் எது பண்ணாலும் ,நோ reactions தான் பண்ணுவார் நம்ம தலைவர்
ஓம் சாந்தி. ஏன் இந்த அப்பாவி மாலுமிகளின் உயிர் இழப்பு? மத்திய கிழக்கில் தற்போது நடக்கும் பைத்தியக்காரத்தனமான போருக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய மாலுமிகளைக் கொண்ட, மேற்கு பசிபிக் நாடான பலாவ்வின் கொடியுடன் காலியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா ஏன் தாக்கியது என்பது புரியவில்லை. இந்த இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் மிகவும் நட்பான நாடுகள். இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
இது வரை பிரதமர் அல்லது வெளியுறவு அமைச்சர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் இடம் இருந்து அமெரிக்காவை கண்டித்து ஒரு கண்டன அறிக்கை கூட இல்லை . இதுவே பாகிஸ்தான் என்றால் ராஜ் நாத் சிங் எகிறி குதித்து அறிக்கை வெளியிட்டு இருப்பார்
அமெரிக்கா அழிந்தால் தான் உலகம் உருப்படும்.
அமெரிக்கா மட்டுமல்ல சீனாவும் அழியனும்
இந்தியாவை நம்பி தான் மாலுமிகள் கப்பலை இயக்குகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இந்தியாவின் பதில் என்ன. கொன்றவர்களுக்கு இந்தியாவின் பதிலடி என்ன. அமெரிக்கன் ஒருவனை இந்தியா கொன்றுவிட்டால் சும்மா இருப்பானா ட்ரம் செட்.
இது போன்ற கப்பல்களிலிருந்து எண்ணையும் எரிவாயுவும் வருகின்றன. வெள்ளை சட்டை ராகுலுக்கும், கருப்பு சட்டை ஸ்டாலினுக்கும், சிவப்பு சட்டை ஞான சூனியங்களுக்கும் இது பற்றி தெரியாது, புரியாது
உங்க வீடு பிரச்சனைக்கு உதவாக்கரை வீடுகளுக்கு சொல்லி உங்க நிலையை தரம் தாழ்த்தி கொல்லாதீங்க.
ஆட்சியில் இருப்பது மோடி, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் முதலில் இவர்கள் அமெரிக்காவை கண்டு ஒரு அறிக்கை விட்டார்களா
சரக்கு கப்பல் என்றால் நமக்கு வேற மாதிரி அர்த்தமாகுது ...கார்கோ என்று போட்டிருக்கலாம் ..
தமிங்கிலீஷ் கேட்கிறீர்களா