பாராட்டு விழா

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விழாவை முன்னாள் மாணவர்கள் போதராஜா, பால்பாண்டி, முருகேசன் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement