2 காலம் நல்லுாரில் ஆனி தேர்த்திருவிழா சிறப்பு ேஹாமத்துடன் துவக்கம்
திருப்பூர், ஜூன் 23–
நல்லுார், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலின் இரண்டாவது ஆண்டு ஆனி தேர்த்திருவிழா, சிறப்பு ஹோம பூஜை மற்றும் கிராமசாந்தியுடன் நேற்று துவங்கியது. இன்று கொடியேற்றம் நடக்கிறது. 400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், பக்தர்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட புதிய தேர்களில் கடந்த ஆண்டு முதல் ஆனி தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அறங்காவலர் குழு தலைவர் முருகேசன், அறங்காவலர் பிரியா கனகராஜ், செயல் அலுவலர் வனராஜா முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இன்று முதல் தினமும் அபிஷேகம் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 28ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 29ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பரிவேட்டை, தெப்ப உற்சவம், நடராஜர் தரிசனம் மற்றும் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற உள்ளது.
––
நல்லுார், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் சுவாமி கோவில் தேர்த்திருவிழா, சிறப்பு ஹோம பூஜையுடன் நேற்று துவங்கியது.