விளைபொருள் ஆதார விலை ஏர்முனை இளைஞரணி கேள்வி
பல்லடம், ஜூன் 23-–
‘‘விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காதது ஏன்?’’ என்று ஏர்முனை இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் சுரேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது:
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தி வருகின்றன. காய்கறி உள்ளிட்ட பல விளைபொருட்களுக்கு விவசாயிகளால் விலை நிர்ணயிக்க முடியாத நிலை உள்ளது. உரம் மற்றும் விவசாய கருவிகளுக்கான மானியத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும். அதிகாரிகளின் கருத்தை மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைகளையும் கேட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement