ஹிந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அன்னூர்: அன்னூரில் ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில், நீதிமன்ற உத்தரவுப்படி, தீபம் ஏற்ற வேண்டும். திருக்கோவில் நிர்வாகத்தில், ஆன்மீகவாதிகள், பக்தர்களுக்கு, முன்னுரிமை தர வேண்டும். அரசியல்வாதிகள், நாத்திகர்கள், கிறிஸ்துவ, இஸ்லாமியருக்கு அறங்காவலர் பதவி தரக்கூடாது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்த கூடாது. நவோதயா, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், பள்ளி, மாணவ, மாணவியர், திருநீறு, குங்குமம், ருத்ராட்சம் அணிவது தடுக்கப்படும் என்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் ஆர்ப்பாட்டம் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு நடந்தது.

கட்சியின் மாநில அமைப்பு குழு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார். மாநில துணைத்தலைவர் முத்தா ரங்கசாமி, கோட்டச் செயலாளர் சூர்யா, ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement