கிருஷ்ணராயபுரம் பகுதியில் பூக்கள் விற்பனை மந்தம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், மாயனுார், எழுதியாம்பட்டி, செக்கணம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இதில், விரிச்சிப்பூக்கள், சின்ன ரோஜா, செண்டுமல்லி, மல்லிகை, முல்லை ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, வெயில் காலம் என்பதால், செடிகளில் பூக்கள் வரத்து அதிகம் உள்ளது. விவசாயிகள் செடிகளில் இருந்து பூக்களை பறித்து, கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
இதில், சின்ன ரோஜா, ஒரு கிலோ, 150 ரூபாய், விரிச்சி, 60 ரூபாய், செண்டுமல்லி, 40 ரூபாய், மல்லிகை, 300 ரூபாய், முல்லை, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. திருவிழாக்கள் மற்றும் முகூர்த்த சீசன் இல்லாததால், பூக்கள் விற்பனை மந்தமாக இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement