கப்பல் கட்டும் தொழிற்சாலை வராதது தான் மாற்றமா?
@quote@ தமிழகத்தில் ஏற்கனவே இருந்த திட்டத்தை, 'சிங்கப்பெண் படை' என, 'காப்பி பேஸ்ட்' செய்து தமிழக வெற்றி கழகத்தினர் 'ஸ்டிக்கர்' ஒட்டுகின்றனர். என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்றே, அவர்களுக்கு தெரியவில்லை.
முதன்முதலாக மகளிரை காவல்துறைக்கு கொண்டு வந்தது கருணாநிதி. மகளிர் பாதுகாப்புக்காக தனி பிரிவையே உருவாக்கியது ஸ்டாலின். இன்று புதிதாக ஒரு சீருடையை வழங்கினால், அது புதிய திட்டமாக மாறி விடுமா?
ஆட்சியில் இருப்பவர்கள், தயவு செய்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். தேர்தல் நேரத்தில், நினைத்ததை எல்லாம் வாக்குறுதியாக கூறி விட்டு, தேர்தல் முடிந்ததும் நிதி இல்லை என்கின்றனர்.
இன்று தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள், பிற மாநிலங்களுக்கு செல்கின்றன. எனது துாத்துக்குடி தொகுதியில், ஒரு கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது; தற்போது அந்த திட்டம் இல்லை. இதுதான் மாற்றமா?
- - கனிமொழி, தி.மு.க., - எம்.பி.,quote
நீங்க கிழிச்சது போதும். இன்னும் இருபது ஆண்டுகள் அரசியலிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
எலெக்ஷன் முடிஞ்சி போச்சே டெல்லி போயி எம்பி வேலையை எப்ப பாப்பிங்க.
இந்த அம்மா பேசியதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. இளம் விதவைகள் உருவாகுவது சாராய ஆலைகளை மூடுவது நீட் தேர்வு ரத்து இவைகள் எல்லாம் அம்மாவுக்கு ஞாபகம் இருக்கிறதா. பாராளுமன்றத்தில் எம்பியாக இருந்து என்னத்த சாதித்து விட்டீர்கள்.
அதி பயங்கர அராஜகங்களை புரிந்த திமுக ரொம்ப நல்ல்லாவன் மாதிரி பேசுவதை கேட்க நாராசமாக இருக்கின்றது. இந்த அம்மா கொஞ்சம் கூட கூச்ச நாசம் இல்லாம அப்படி பேசிட்டாங்க. இந்த மாதிரி பேச இவர்களுக்கு இருக்கும் அராஜக அசாத்திய துணிச்சலும் சேர்த்து வைத்த பணபலமும் தான் காரணம். மனசாட்சி மருந்துக்கும் இல்லாத அரசியல் வாதிகள்.
வயது ஆயிடுச்சு இந்த திருட்டு திமுக கட்சிக்கு அதான் மக்கள் இந்த கட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
முதலில் ரூபாய் 1000 பிச்சை கொடுப்பது நிறுத்தப்படவேண்டும் ஒரு ஒரு மாதமும் ரூபாய் 1250 கோடி மிச்சம் அதனால். அதை வைத்து ஒரு ஒரு sipcot இல் 50 கோடி மதிப்புள்ள 40 நிறுவனம் 39 மாவட்டத்தில் தொடங்கலாம் - அதில் ஒரு ஒரு மாதமும் 100 பேருக்கு வேலை கொடுத்தால் ஒரு மாதத்திற்கு 4000 பேருக்கும் நிரந்தர வேலை. தமிழ்நாட்டின் GDP உயரும்
அப்படியே திமுக ஆட்சியில எல்லா கம்பெனிகளும் லைன் கட்டி நின்ன மாதிரி பேசுறத பாரு, அசிங்கமே இல்லாத ஒரு பிறவிகள் யாருனு கேட்டா, அது கோபாலபுர குடும்பம் மட்டுமே. மக்கள இனியும் பைத்தியக்காரணனே நினைச்சுகிட்டு இருந்தா எப்படி. இப்படி ஒரு முடிவை குடுத்து வீட்டுக்கு அனுப்பினாலும் திருந்த மாற்றங்களே??
நீங்க வேற ஏன் மேடம்....முரசொலி மாறன் ஐயா ஹூண்டாய் கார் கம்பெனி திறந்து வைத்த விதம் எல்லாம் ஞாபகம் வருது.
Mam, due to your ruling period commission corruption, it went to AP.
இந்த விவகாரத்தில் முன்பு இருந்த அரசின் தொழில்துறை அமைச்சர் எ 4 ஷீட் வியாபாரம் செய்துகொண்டிருந்தாரா ? அது போக இந்த விஷயத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான உங்களுடைய முன்னெடுப்பு /பங்களிப்பு என்ன ? மோடியை எதிர்க்கிறோம் என்ற கேவலமான ஒட்டு அரசியலுக்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த எல்லா திட்டங்களையும் கண்மூடித்தனமாக எதிர்த்தீர்கள். குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் தொடக்க விழா விளம்பரத்தில் ராக்கெட்டில் சீனா அடையாளத்தை போட்டு மோடியை வெறுப்பேற்றுவதாகா நினைத்து இந்தியாவையே எதிர்த்தீர்கள்.
குற்றம் சொல்ல எந்த தகுதியும் இல்லை
வெளிப்படையாக மோடி எதிர்ப்பு ..... ரகசியமாக அமித் சேட்டிடம் சரண்டர் ......