வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு; திமுக அரசு முடித்து வைத்த நிலையில் மறு விசாரணைக்கு உத்தரவு

22


சென்னை: திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி ஊழல் வழக்கு, முந்தைய ஆட்சியில் முடித்து வைக்கப்பட்டது. அதை மறுவிசாரணை செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெருங்களத்துரில், 2016ம் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, தனியார் நிறுவனம் அனுமதி கோரியது. அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு, 27.90 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பின், 2024ம் ஆண்டு செப்., 19ல், வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோருக்கு சொந்தமான, முத்தம்மாள் நிறுவனம் மற்றும் 11 பேர் மீது, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்டங்களின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

திமுகவில் இணைந்த பிறகு இந்த வழக்கில், வைத்திலிங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்கை கைவிடுவதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பிறகு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி மாறி உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி ஊழல் வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதை மறுவிசாரணை செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு முடித்த வழக்கை மீண்டும் விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு பரபரப்பை கிளப்பியது.

Advertisement