ஐ.சி.டி.எஸ்., அலுவலரை கண்டித்து தர்ணா, மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார ஐ.சி.டி.எஸ்., அலுவலர் பூங்கோதையின் செயல்பாடுகளை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தைமுற்றுகையிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதன் பின் சங்க மாவட்டத் தலைவர் தனபாக்கியம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். செயலாளர் பத்மாவதி, பொருளாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மாதத்தில் பணியிட மாறுதல் செய்யப்படுவார் என கூற கலைந்து சென்றனர்.

Advertisement