2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

வடமதுரை: வடமதுரை மோளப்பாடியூரில் வேல்முருகன் வளர்க்கும் பசுமாடு சினை பிடித்து கன்று ஈனும் நேரத்தில் குட்டி வெளியே வராமல் பரிதவித்தது. நடமாடும் கால்நடை மருத்துவக்குழுவினர் பெரும் முயற்சி எடுத்து கன்றை வெளியே எடுத்தனர். இரு தலையுடைய கன்றாக இருந்தது. தன்னிச்சையாக பால் குடிக்க முடியாமல் போக பாட்டில் மூலம் பால் தந்தனர்.

கால்நடைத்துறையினர் கூறுகையில், 'மரபியல் பிரச்னையால் இதுபோன்ற சம்பவம் லட்சத்தில் ஒன்று நடக்க வாய்ப்புள்ளது. இரு மூளைகளுடன் செயல்படும் நிலையில் கன்றுக்குட்டி நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருப்பது சிரமம்' என்றனர்.

Advertisement