சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடமதுரை : திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், எரியோடு சாய்பாபா ஞானலாயம் கோயில்களில் மூலவர், நந்திக்கு சந்தனம், இளநீர், பன்னீர், பால், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் சுவாமிக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், அஷ்டோத்திர பூஜை, தீபாராதனைகள் நடந்தது.சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலி ல் சிறப்பு வழிபாடு ந டந்தது.

பழநி : முருகன் கோயில் கைலாசநாதர் சன்னதி, கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமூதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலைநாயகி அம்மன் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மூலவருக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயிலில் ஏகாம்பரேஸ்வரர், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

ரத்தினகிரீஸ்வரர் கோயில், விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர் கோயில்களில் மூலவர், நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement