நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடில்லி: ஜூன் 21ல் நடக்கும் இளநிலை நீட் தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் ஒதுக்கீடு செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது. இதனால் தேர்வு எழுதிய 22 லட்சம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனையடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மறுதேர்வு வரும் 21 ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அனைவரும் ரகசியமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்வை எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்த ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பகல் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை தேர்வு நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை நிர்வாக நடைமுறைகளால் தேர்வெழுத்துவதற்கான நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருதிய நிலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வினாத்தாள் புத்தகத்தில் 'தோராயக் கணக்கீடு' (rough work) செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த வருடங்களில் இந்த சலுகையைப் பெற முடியாத தேர்வர்கள் என்ன நினைப்பார்கள் ????
நீட் தேர்வு எழுதும் மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்