பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் :போலீசார் எச்சரிக்கை
திருவாடானை:
திருவாடானையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை போலீசார் நடுவழியில் நிறுத்தி எச்சரித்தனர்.
திருவாடானையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். தினமும் காலையில் பள்ளிக்கு வருவதும், மாலையில் வீடு திரும்புவதற்க்கும் போதிய பஸ் வசதியில்லாததால் சிரமபடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திருவாடானையில் இருந்து திருவெற்றியூர் நோக்கி அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கூட்டமாக இருந்நததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் பஸ்சின் முன்பக்க, பின்பக்க படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்க தொடங்கினர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்கள் தொங்கி கொண்டு செல்வதை பார்த்தனர். உடனடியாக பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். மாணவர்களை பஸ்சின் உள்ளே சென்று பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுத்து, எச்சரித்தனர். எனவே பள்ளிவிடும் நேரமான மாலை 4:30 முதல் 5:30 மணி வரை திருவாடானையில் இருந்து கிராமங்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.